கேப்டனை மாற்ற நேரம் வந்தாச்சு; தோனிக்கு பதில் கோஹ்லி


நாக்பூர்: "தோனிக்குப்பதில் கேப்டன் பதவியில் விராத் கோஹ்லியை அமர்த்த நேரம் வந்துவிட்டது,'' என, கவாஸ்கர் தெரிவித்தார்.
டெஸ்ட் அரங்கில் தோனி தலைமையில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் 8 போட்டிகளில் தோற்றது. தற்போது இந்திய மண்ணிலும் இங்கிலாந்திடம் தொடரை இழந்துள்ளது. இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து தோனியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. நாக்பூர் டெஸ்டில் சதம் அடித்து அசத்திய இளம் விராத் கோஹ்லி வசம் கேப்டன் பதவியை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறியது: 

நாக்பூர் டெஸ்டின், நான்காவது நாள் வரை, தோனிக்கு மாற்று வீரர் யாரும் இல்லை என்று தான் கூறினேன். ஆனால், கோஹ்லி சதம் அடித்து பின், இவரிடம் உள்ள திறமை வெளிப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரையில், இவர் கேப்டன் பதவிக்கு தயாராகிவிட்டார்.


பா.ஜ., அரசின் பசுவதை தடை சட்டம் : முட்டுக்கட்டை போடும் கர்நாடகா கவர்னர்பா.ஜ., அரசின் பசுவதை தடை சட்டம் : முட்டுக்கட்டை போடும் கர்நாடகா கவர்னர்

பெங்களூரு: கர்நாடகாவில், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான, பா.ஜ., அரசு நிறைவேற்றியுள்ள, பசுவதை தடை சட்டத்துக்கு, ஒப்புதல் அளிக்க மறுத்து, கவர்னர் பரத்வாஜ் முட்டுக் கட்டை போடுவதால், அந்த சட்டம் அமலுக்கு வருவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்திய பண்பாடு, கலாச்சாரத்தில் பசுக்கள் மிக சிறப்பான இடத்தை பெற்றுள்ளன. விவசாய நாடான இந்தியாவில், பசுக்களை பட்டினி போட்டு விட்டு, எந்த விவசாயியும் சாப்பிட மாட்டான். ஆனால், இன்று, பசு வம்சமே அழிந்து விடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், தொடர்ந்து நடக்கும் பசுவதையே, இதற்கு காரணம்.கடந்த சில நாட்களுக்கு முன், கர்நாடக மாநிலம் பெல்காமில் நடந்த, சட்டசபை கூட்டத் தொடரில், பசுவதை தடுப்பு மற்றும் பாதுகாப்பு மசோதாவுக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது. அப்போது, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர், சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதன்பின், இந்த இரு கட்சியினரும், கவர்னர் பரத்வாஜை சந்தித்து, "பசுவதை தடை சட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது' என, வலியுறுத்தி மனு அளித்தனர்.அப்போது பேசிய கவர்னர், "பசுவதை தடை சட்டத்துக்கு, தேசிய அளவில் எதிர்ப்பின்றி, ஒரு மித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே, அதை அமல்படுத்த முடியும். எனவே, யாரும் பயப்பட வேண்டாம்' என, அவர்களுக்கு தைரியம் கொடுத்தார்.
இந்த விவகாரத்தால், கர்நாடக அரசு நிறைவேற்றியுள்ள, பசுவதை தடை சட்டத்திற்கு, அவர் ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறார். அதனால், அந்தச் சட்டம் அமலுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ., தலைவர்களும், இந்த விஷயத்தில், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல், தவித்து வருகின்றனர்.ஏற்கனவே ஒரு முறை, பசுவதை தடை சட்டத்தை, கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றி, கவர்னர் ஒப்புதலுக்காக, பா.ஜ., அரசு அனுப்பியது. ஆனால், அவரோ, சில காரணங்களைக் கூறி, அதை திருப்பி அனுப்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



 

Footer Widget #1

Footer Widget #2

A

Footer Widget #3

A

Footer Widget #4

Copyright 2010 EXAM RESULTS. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog